சென்னையில் சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் ஜோசப் விஜய் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.சென்னை, அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை அமைத்துள்ளது. இந்த தரவு மையம் சுமார் 4,900 சர்வர் ரேக்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த தரவு மையத்தை முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர்.இதனைத் தொடர்ந்து, 4 ஏக்கர் பரப்பளவில் 7 அடுக்கு மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ள தரவு மையத்தை முதல்வர் விஜய்யும், சிங்கப்பூர் துணை பிரதமரும் சுற்றிப் பார்த்தனர்.கடந்த 2024 ஆம் ஆண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த தரவு மையத்தை சிங்கப்பூர் நிறுவனம் திறந்துள்ளது.இந்த நிகழ்வில் பங்கேற்க அம்பத்தூர் சென்ற முதல்வர் விஜய், காரிலிருந்து இறங்கி சாலைகளில் கூடியிருந்த மக்களின் வரவேற்பைப் பெற்றார்.Data center inaugurated in Chennai! Chief Minister Vijay and Singapore Deputy Prime Minister participate!அமைச்சரவை மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!