‘அப்துல் கலாமுக்கு அண்ணா பல்கலை.யில் சிலை அமைத்தது திமுக அரசு’ - மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Wait 5 sec.

பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் என் புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன். வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார். நமது திமுக அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம். அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.DMK leader M.K. Stalin pays tribute to Bharat Ratna Abdul Kalam on his birth anniversary, offering his respectful salutations.