இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விவசாய தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் தொட்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி. விவசாய தொழிலாளியான இவா் பவானிசாகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியில் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வெள்ளியங்கிரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீட்டு தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.