துர்க்காஷ்டமியில் ஒடிசா ஆளுநராகப் பொறுப்பேற்கிறார் பிரஜ் மோகன் ராம்!

Wait 5 sec.

ஒடிசாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பிரஜ் மோகன் ராம் அக். 18.ம் தேதி பொறுப்பேற்கவிருப்பதாகத் தெரிவித்தார். ஜனவரி 3, 2025 அன்று பொறுப்பேற்ற ஹரிபாபு கம்பம்பதிக்குப் பதிலாக, பிரஜ் மோகன் ராம் அந்தப் பொறுப்பை ஏற்கிறார். நவராத்திரி துர்க்காஷ்டமி எனும் மங்களகரமான நாளான அக்டோபர் 18 அன்று ஒடிசா ஆளுநராகப் பொறுப்பேற்பேன் என்று ராஞ்சி, மொராபாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். மூன்று முறை பாஜக எம்பியாக இருந்த பிரஜ் மோகன் ராம், அக்டோபர் 17 அன்று ஒடிசாவுக்குப் புறப்பட்டுச் சென்று, மறுநாள் பதவியேற்பார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். நான் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன். மாநிலத்தின் வளர்ச்சியே எனது முதன்மையான நோக்கமாக இருக்கும்.கல்வி, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உள்பட்ட பிற முக்கிய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.ஜார்க்கண்டின் பாலமு மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜ் மோகன் ராமை, ஒடிசாவின் புதிய ஆளுநராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை நியமித்தார்.தில்லி போராட்டத்தில் பரத்வாஜ் மீது திட்டமிட்டுத் தாக்குதல்: சௌரப் பரத்வாஜ் புகார்!