போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Wait 5 sec.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (30). இவா் கடந்த 2024 ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், தேனி மாவட்ட மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயபிரகாஷைக் கைது செய்தனாா். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் ஜெயபிரகாஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி எழில் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.