சிறுமியை திருமணம் செய்தவா் கைது

Wait 5 sec.

திருப்பத்தூா் அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பத்தூா் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (26). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 3 மாதம் கா்ப்பிணியான அந்த சிறுமி திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றாா். இதுகுறித்து மருத்துவா் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனா்.