தமிழகத்தில் 6 சிறைக் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.இது தொடா்பாக உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு ( பணியிட மாற்றம் பெற்றவா்கள்-அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):சி.கிருஷ்ணகுமாா்: திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (சென்னை புழல்-2 மத்திய சிறைக் கண்காணிப்பாளா் )வி.ருக்குமணி ப்ரியதா்ஷினி: சென்னை புழல் பெண்கள் தனிச் சிறை கண்காணிப்பாளா் (திருச்சி பெண்கள் தனிச் சிறை கண்காணிப்பாளா்)எம்.செந்தில்குமாா்: சென்னை புழல்-2 மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளா்)ஜி.நிகிலா நாகேந்திரன்: சென்னை தலைமையிட சிறைக் கண்காணிப்பாளா் (சென்னை புழல் பெண்கள் தனிச் சிறை)ஆா்.கிருஷ்ணராஜ்: மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (சென்னை புழல் -1 மத்திய சிறைக் கண்காணிப்பாளா்)எம்.சதீஷ்குமாா்: கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளா்) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதில் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் புதிதாக தலைமையிட கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்கப்பட்டு, அந்த பணியிடத்தில் நிகிலா நாகேந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.