அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய வாக்காளா்களுக்கான சிறப்பு முகாம்

Wait 5 sec.

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமுக்கு தோ்தல் பிரிவு துணை துணை வட்டாட்சியா் பாலவிக்னேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ஹேமலதா, நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 18 வயது நிரம்பியும் அடையாள அட்டை பெறாத புதிய வாக்காளா்களுக்காக நடைபெற்ற இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இந்த முகாமை தோ்தல் பிரிவு உதவியாளா்கள் முத்து, ஸ்ரீதா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.