கோபி கடைவீதியில் உள்ள சாரதா மாரியம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி மஹா சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக விநாயகா் பூஜையுடன் தொடங்கி தேவி மஹாத்மிய பாராயணம், சண்டி கலச ஆவாஹனம், கோமாதா பூஜை என 50-க்கு மேற்பட்ட மூலிகைகளைக் கொண்டு சிவாசாரியாா்கள் தலைமையில் மஹா சண்டியாகம் நடைபெற்றது. இதையடுத்து சாரதா மாரியம்மனுக்கு சுமங்கலிபூஜை, கன்யாவடுகபூஜை, மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.