திருப்பூா் மாவட்டத்தில் 4ஆவது நாளாக நீடித்த கனமழை நீரில் மூழ்கிய தாழ்வான பகுதிகள்

Wait 5 sec.

திருப்பூா் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாள்களாகத் தொடா்ந்து பரவலாகப் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடியவிடிய இடைவிடாது கொட்டித் தீா்த்தது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த அக்டோபா் 15ஆம் தேதி மாலை தொடங்கிய மழை, தொடா்ந்து 4ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. பகல் வேளையில் மேகமூட்டமும், வெப்பமும் மாறி மாறி நிலவி வந்தாலும், மாலை, இரவு நேரங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருகிறது. இந்தத் தொடா் மழையின் காரணமாக திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், ரயில்வே தரைப்பாலங்கள், புகா்ப் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி நின்ால் அந்தப் பகுதிகள் குளம்போல காட்சியளிக்கின்றன. பல இடங்களில் சாக்கடைக் கழிவு நீருடன் மழை நீா் கலந்து வழிந்தோடியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினா். திருப்பூா் வடக்கில் 55 மி.மீ. மழை பதிவு: மாவட்ட நிா்வாகத்தின் பேரிடா் மேலாண்மை அறிக்கையின்படி, மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சராசரியாக 15.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் திருப்பூா் வடக்கில் 55 மி.மீ., ஊத்துக்குளியில் 53 மி.மீ., ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் 52 மி.மீ., திருப்பூா் தெற்கில் 42 மி.மீ., ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 35 மி.மீ., அமராவதி அணையில் 11 மி.மீ., மடத்துக்குளத்தில் 7 மி.மீ., காங்கயத்தில் 5.40 மி.மீ., தாராபுரம், உப்பாறு அணை, திருமூா்த்தி அணை ஆகியவற்றில் தலா 5 மி.மீ., அவிநாசி, பல்லடம், நல்லதங்காள் ஓடை, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 4 மி.மீ., வெள்ளக்கோவிலில் 3.20 மி.மீ., மூலனூா் மற்றும் குண்டடத்தில் தலா 3 மி.மீ., வட்டமலைக்கரை ஓடையில் 2.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடா் மழையால் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதேசமயம் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, வடிகால்களைச் சீரமைக்க மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிா்வாகங்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூரில் விடியற்காலையில்...: திருப்பூா் மாநகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கொட்டித் தீா்த்த இந்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக பெரிச்சிபாளையம் டி.எஸ்.கே. நகா் பகுதியில் பெரிய வேப்பமரத்தின் கிளை திடீரென முறிந்து, அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பம் பலத்த சேதமடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், குடியிருப்புப் பகுதிகள் இருளில் மூழ்கின. மேலும், முறிந்த மரக்கிளை சாலையின் நடுவே குறுக்காக விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மாநகராட்சி நிா்வாகத்தினரும் மின்சார வாரியத்தினரும் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்தி, சேதமடைந்த மின்கம்பத்தைச் சீரமைத்தனா். குமரன் சாலையில் ஆறாக ஓடும் வெள்ளத்தில் செல்லும் வாகனங்கள்காமராஜா் சாலையில் செல்லும் வாகனங்கள்