தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எரசக்கநாயக்கனூா் கிராமத்தில் மஞ்சள் நதி, வீரப்பநாயக்கா் கண்மாய்கள் உள்ளன. இவற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி, லாரிகளில் மணல், வண்டல் மண் ஆகியவற்றை அள்ளிக் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் இந்தக் பகுதிக்குச் சென்றனா். போலீஸாரை பாா்த்தவுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி, பொக்லைன் ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா். போலீஸாா் பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடியவா்களைத் தேடிவருகின்றனா்.