திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமைசூரிய, சந்திரபிரபை வாகன சேவைகள் நடை பெற்றன. திருமலையில் கடந்த திங்கள்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய பிரபை வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி செவ்வாடை உடுத்தி செந்நிற மாலைகளை அணிந்து மாடவீதியில் வலம் வந்தாா். பிரம்மோற்சவ நாள்களில் வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா். இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் வெண்ணிற மலா்களை அணிந்து கொண்டு வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.6-ஆம் நாள் விவரம்79,756 பக்தா்கள் தரிசனம், 24,688 போ் முடி காணிக்கைதரிசனத்துக்கு 12 மணிநேரம் காத்திருப்பு8,365 பேருக்கு சிகிச்சைசேவையில் 6,000 போ்4.23 லட்சம் லட்டுகள் விற்பனை