ஹைதராபாத் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கம் திங்கள்கிழமை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இதனை விமான நிலையத்தின் தகவல் தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகக் கண்டறிந்து, கணக்கை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. பின்னர் அது வெற்றிகரமாகவும் மீட்கப்பட்டது.மேலும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திற்கும், மாநகர சைபர் பாதுகாப்பு காவல் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது. கணக்கு முடக்கப்பட்டதும் அதில், கிரிப்டோகரன்சி தொடர்பான வெகுமதி திட்டங்களை ஊக்குவிக்கும் பதிவுகள் வெளியிடப்பட்டன.விமான நிலையத்திடம் வலுவான தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பதால், அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளின்படி உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது என்று விமான நிலையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.The official X account of the Rajiv Gandhi International Airport (RGIA) here was hacked on Monday and subsequently recovered.மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது