தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அண்மையில் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட பற்றாக்குறைக்கு, இந்த வடகிழக்கு பருவமழை மூலமாக நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. The Chennai Meteorological Department has announced that rain is likely to occur in 15 districts across Tamil Nadu, including Chennai, until 4 PM today.மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்