ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகை நோரா ஃபதேகியிடம் ஆப்பிரிக்க குழந்தைகள் கொஞ்சி விளையாடிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்.15ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் நோரா ஃபதேகி பிந்தாஸ் என்ற ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனமாடி இருக்கிறார். இந்தப் பாடலுக்கும் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் பாடலில் இன்ஸ்டாவில் புகழ்பெற்ற மசாகா கிட்ஸ் ஆப்பிரிக்கா எனும் குழந்தைகளும் நடனமாடி இருந்தார்கள். ஆப்பிரிக்க கண்டத்தில் உகாண்டா நாட்டின் மசாகா எனுமிடத்தில் இருக்கும் இந்த சிறுவர் சிறுமிகள் குழு நடனமாடி புகழ்பெற்றார்கள். இவர்களுடன் படப்பிடிப்பில் எடுத்த விடியோவை நோரா ஃபதேகி பகிர்ந்துள்ளார். அதில் குழந்தைகள் அவரது மடியில் உட்கார்ந்து அவரது தலைமுடியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்த்து பேசும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. தனக்குப் பிடித்த நடனக் காட்சி, குழந்தைகளுடன் நேரம் செலவிட்டது, ரஜினி சாரை சந்தித்தது என பல நெகிழ்ச்சியான புகைப்படங்கள், விடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. View this post on Instagram 27 வயதில் காலமான மலையாள இயக்குநர்! Masaka Kids Africans playing with Nora Fatehi in Jailer 2 sets, BTS video viral