கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் எறிபத்த நாயனார் பட்டத்து யானையைத் துண்டித்த விழாவில் பூக்குடலையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.கரூரில் சிவனடியாரான எறிபத்த நாயனார், சிவபக்தர்களின் இன்னல்களைப் போக்கும் குணம் கொண்டவராகத் திகழ்ந்தார். திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு மன்னன் புகழ்ச்சோழர் ஆண்டபோது, கரூர் அவரது ஆளுகைக்குட்பட்டிருந்தது. கரூருக்குத் தன் படைகளுடன் அருகில் உள்ள சிற்றரசர்களிடம் வரி வசூலிக்க வந்திருந்தபோது, அவரது படையிலிருந்த யானை மதம் பிடித்தது. சிவகாமி ஆண்டார் என்ற வயது முதிர்ந்த முனிவர், ஆநிலையப்பரான பசுபதீசுவரருக்குச் சாத்துவதற்காக மகா அஷ்டமி நாளில் ஊர்வலமாகக் கொண்டு வந்த பூக்குடலையைப் புகழ்ச்சோழ மன்னனின் பட்டத்து யானை சிதறடித்துவிட்டது.அப்போது எறிபத்த நாயனார், யானையையும் பாகருடன் சேர்ந்த ஐவரையும் மழுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதையறிந்த புகழ்ச்சோழர் படையுடன் வர, அப்போது சிவபெருமான் எழுந்தருளி யானையையும் பாகரையும் உயிர் பெற்று எழச் செய்தார். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டிற்கான விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் பசுபதீஸ்வரர் மற்றும் எறிபத்த நாயனார் ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பல்லக்கில் பசுபதீஸ்வரர் கோயிலிலிருந்து பக்தர்களால், எறிபத்த நாயனார் யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தும் நிகழ்ச்சி நடைபெறும் கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன் எடுத்து வரப்பட்டனர். பின்னர் அங்குச் சிவனடியார்கள் தத்ரூபமாக யானையின் துதிக்கையை எறிபத்த நாயனார் துண்டிப்பது போன்று நிகழ்த்திக் காட்டினர். தொடர்ந்து, கோயிலிலிருந்து பசுபதீஸ்வரர் சுவாமி எழுந்தருள, பக்தர்கள் பூக்குடலையுடன் ஊர்வலம் சென்றனர்.அஷ்டமி நாள் விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மலர்க் குடலைகளை ஏந்தி திருவீதி உலாவாக வந்து, ஆநிலையப்பருக்கும் பைரவருக்கும் மலர்களைச் சாத்திய பின் தீபாராதனை நடந்தது. இதில் மல்லிகை, முல்லை, தும்பை, அரளி, தாமரை, வில்வம், மகிழம், நந்தியாவட்டம், சங்குப்பூ, ஜாதிப்பூ, எருக்கன், விருச்சிப்பூ, சிகப்பு அரளி, பவழமல்லி, செவ்வந்தி முதலான பூக்களை ஏராளமான பக்தர்கள் கொண்டுவந்து சுவாமியைத் தரிசனம் செய்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். Thousands of devotees carrying flower baskets participated in the annual festival at Karur Pasupatheeswarar Temple, which commemorates the legendary event of Eripatha Nayanar severing the royal elephant's tusk.அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை!