பேல்பூரி- 18-10-26

Wait 5 sec.

கண்டது...(அருப்புக்கோட்டையில் உள்ள ரெடிமேட் கடை ஒன்றின் பெயர்)'ஆம்பள சொக்கா.'-அன்னபூர்ணா, கோவில்பட்டி. (செங்குன்றத்தில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்) 'விடியாத வானில் இருளே மிஞ்சும்... முயலாதவன் வாழ்வில் தோல்வியே மிஞ்சும்!' -சிவம், திருவள்ளூர். (கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)'புகைப்பட்டி.'- க. பூமலை, நமசிவாயபுரம். (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)'அடையாமடை.'-அ.இரவீந்திரன், கன்னியாகுமரி. கேட்டது... (அம்பத்தூரில் டீக்கடை ஒன்றில் இரு நண்பர்கள்...)'டீ விலை உயர்ந்ததை நினைச்சா கஷ்டமா இருக்குடா...' 'நீ ஏன்டா கஷ்டப்படுறே... தினமும் உனக்கு ஓசி டீ வாங்கித்தர்ற நான்தானேடா கஷ்டப்படணும்?'-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம். சிக்கிறாங்கப்பா...'உன்னைக் கொல்லும் ஓர் ஆயுதம் உன் கோபம்... உலகையே வெல்லும் ஓர் ஆயுதம் உன் மெளனம்!'-அ. சாந்த பிரியா, மாம்பலம்.