சிரி... சிரி...

Wait 5 sec.

'வாஸ்துப் படி கிச்சன் எங்கே இருக்கணும்?''என்னோட கண்ல படாம இருக்கணும், அத்தை!' - பர்வதவர்த்தினி, பம்மல்.-------------------------------------------------------------------------------------------'அந்த டாக்டர், போலின்னு எதை வச்சி சொல்றே?''கால்ல ஆணி இருக்குன்னு சொன்னா, கட்டிங் பிளேயரை எடுத்து 'காலைக் காட்டுங்க'ன்னு சொல்றாரே!'- க. பூமலை, நமசிவாயபுரம். -------------------------------------------------------------------------------------------'ரன்னிங் ரேஸ் நடக்குற இடத்துல மைக்செட் காரருக்கு என்ன வேலை?' 'ஒன் டூ த்ரீ சொல்வாராம்!'-பர்வீன் யூனுஸ், சென்னை.-------------------------------------------------------------------------------------------'அந்த ஹோட்டலில் எது காரசாரமா இருக்கும்?''மிளகாய்ப் பொடி மட்டும்தான்... டிபன் சப்பென்று இருக்கும்!'-மஞ்சுதேவன், பெங்களூரு.-------------------------------------------------------------------------------------------'மரணத்துக்குப் பின்பும் வாழ்க்கை இருக்கா?' 'ஏன் சார் இப்படிக் கேக்குறீங்க?' 'நேத்து உங்க சித்தப்பா இறந்துட்டாருன்னு லீவு கேட்டீங்க... இன்னைக்கு உங்க சித்தப்பா உன்னைப் பார்க்க இந்த ஆபீசுக்கு வந்தார்!'-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.-------------------------------------------------------------------------------------------'இன்னைக்கு நைட்டு நான் வர லேட் ஆகும்மா...''அப்ப டின்னர்?''ஆபீஸ்லயே சாப்பிட்டுக்குவேன்மா...!''நான், என்னோட டின்னரைப் பற்றி கேட்டேன்ங்க!'-------------------------------------------------------------------------------------------'எங்க பால்காரர் கிணத்துல விழுந்து செத்துட்டாராம்...''எதுக்கு கிணத்துல விழுந்து சாகணும்?' 'பாலுக்கு ஊத்த தண்ணி பிடிக்க கிணத்துல இறங்கினப்ப தவறி விழுந்துட்டாராம்!'-வி.ரேவதி, தஞ்சை.