ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: இணைப்பு பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படும்!

Wait 5 sec.

பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திற்கு போதுமான இணைப்பு பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகளும், தீபாவளிக்கு 15,659 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்திருந்தார்.ஆயுத பூஜை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திற்கு போதுமான இணைப்பு பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படும். மேலும், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து போதுமான இணைப்புப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.பேருந்துகள் புறப்படும் இடங்கள்கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.கிளாம்பாக்கம் சி.எம்.டி.ஏ. காலநிலைப் பூங்கா அருகேயுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை வழித்தடங்களிலும், மறைமலை நகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்.கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டா் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி வழித்தடங்களிலும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படும்.Sufficient connecting buses will be operated to the temporary bus terminus free of charge.வெளியானது முக்கிய அறிவிப்பு! ஆயுதபூஜை, தீபாவளிக்கு எத்தனை சிறப்புப் பேருந்துகள்?வெற்றிப் பயணத் திட்டத்தால் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்! பாவூா்சத்திரத்தில் நின்று செல்லுமா ஒன்- டூ- ஒன் பேருந்துகள்!