எங்கள் பெண் புலியுடன்... துருவ் ரதீ வெளியிட்ட புகைப்படம் வைரல்!

Wait 5 sec.

அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரபல யூடியூபர் துருவ் ரதீ வெளியிட்டுள்ளார். 'எங்கள் பெண் புலியுடன்' எனக் குறிப்பிட்டு அவர் நேஹா போராவுடனான எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். பிறகு தில்லி ஜந்தர் மந்தரில் இருவருமே போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் தனியாக போராட்டத்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய மாணவர் சங்கம், தேசிய மாணவர் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருந்து பிறகு விடுத்தனர். எனினும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பேரணியிலும் ஈடுபட்டார். காவல் துறையின் தடியடியால் நாங்கள் முடங்கிவிடமாட்டோம் எனக் குறிப்பிட்டு தொடர்ந்து நேஹா போரா, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேஹா போராவை பிரபல யூடியூபர் துருவ் ரதீ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் துருவ் பகிர்ந்துள்ளார். 'எங்கள் பெண் புலியுடன்...' எனக் குறிப்பிட்டு இப்படத்தை துருவ் பகிர்ந்துள்ளது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. View this post on Instagram அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்! கரப்பான்பூச்சியுடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்?With our tigress Photo shared by Dhruv Rathee goes viral with neha bora