பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:''பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி., சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார். அடுத்த இரு வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சியும் (பிசியோதெரபி), ஓய்வும் எடுக்கும்படி மருத்துவர் அன்புமணி இராமதாஸுக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு: நவ. 3 வரை விண்ணப்பிக்கலாம்!Anbumani undergoes foot surgery: instructed to take 2 weeks of rest!