சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு: நவ. 3 வரை விண்ணப்பிக்கலாம்!

Wait 5 sec.

சென்னையில் உள்ள ஆறுகளை சீரமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.செலவு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்த திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் நவ. 3 ஆம் தேதி காலை 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் தலைவர் பாலாஜி நரசிம்மன் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அமைத்தது.இந்தக் குழு குறுகிய காலம் 2026 வடகிழக்குப் பருவமழைக்கு முன், நடுத்தர காலம் -2027 கோடைகாலத்துக்கு முன், நீண்ட காலம் அடுத்த 3-5 ஆண்டுகளுக்குள் என 3 செயலாக்க காலங்களில் பல்வேறு துறைகளின் கீழ் பரிந்துரைகளை அளித்துள்ளது. முதல்வர் விஜய்யிடம் இந்த அறிக்கை கடந்த செப்.21-ல் அளிக்கப்பட்டது.ஆறுகள், கால்வாய்கள் மற்றும் முக்கிய வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என குறுகிய கால பரிந்துரையாக அளிக்கப்பட்டுள்ளது.நீர்வளத் துறையின் கீழ் உள்ள முக்கிய ஆறுகள், கால்வாய்கள், நீர்வழிகள், வெளியேற்ற வாயில்கள், குளங்கள், மதகுகள், வெள்ளத் தடுப்புகள், அணைகள் மற்றும் கரைக்கட்டுகளில் அவசரகால சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.The Tamil Nadu government has invited tenders to rehabilitate rivers in Chennai.கூவம் ஆற்றில் நடைபாதை, மிதிவண்டி பாதை, பசுமைப் பகுதிகள் அமைக்கத் திட்டம்! முதல்வர் ஆலோசனை