நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படம் வசூல் சாதனையைச் செய்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தனர். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் பல பகுதிகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் 4 நாளில் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால், குறுகிய நாள்களிலேயே இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 பெற்றுள்ளது. வசூலில் பல சாதனைகளைச் செய்த நடிகர் ரஜினிகாந்த் 75 வயதிலும் இந்திய அளவில் பல நடிகர்களையும் ஆச்சரியப்படுத்தவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தில்லி ரேஸ் கிளப் வெளியேற்ற நோட்டீஸ் விவகாரம்: ஜாக்கி சங்க மனுவை தள்ளுபடி செய்தது உயா்நீதிமன்றம்நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மார்பு, தோள்பட்டையில் காயம்! Actor Rajinikanth's Jailer 2 is creating a box office record.