மாற்றமின்றி தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

Wait 5 sec.

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 521 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 23100 புள்ளிகளுக்கு கீழும் வணிகமாகி வருகிறது. நடுத்தர மற்றும் சிறு, குறு தர நிறுவனங்கள் 0.5% வரை சரிவுடன் வணிகமாகி வருகின்றன. பொதுத் துறை வங்கிகள் 2% உயர்வுடனும் தனியார் துறை வங்கிகள் 2% சரிவுடனும் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,849 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. 10.15 மணி நிலவரப்படி, 254 புள்ளிகள் சரிந்து 74,474 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. இது மொத்த வணிகத்தில் 0.34 சரிவாகும்.இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று காலை 74,849 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. 10.15 மணி நிலவரப்படி 51 புள்ளிகள் சரிந்து 23,058 புள்ளிகளுடன் வணிகமாகி வருகிறது. மொத்த வணிகத்தில் இது 0.24% சரிவாகும். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும் எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன. அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 2.64% உயர்வுடன் வணிகமாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ பங்குகள் 1.77%, எல்&டி 1.48%, மாருதி சுசூகி 1.21%, அதானி போர்ட்ஸ் 1.01%, ரிலையன்ஸ் 0.99%, பவர் கிரிட் 1.05% உயர்வுடன் வணிகமாகி வருகின்றன. ஆக்ஸிஸ் வங்கி 3.66% சரிவுடன் வணிகமாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக எச்.டி.எஃப்.சி வங்கி -2.14%, ட்ரெண்ட் -1.73%, இன்ஃபோசிஸ் -1.39%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் -1.04%, பஜாஜ் ஃபைனான்ஸ் -0.57% வணிகமாகி வருகிறது.நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் பிஎன்பி, கரூர் வைசியா வங்கி, சென்னை பெட்ரோ, கனரா வங்கி, யூனியன் வங்கி, காப்ரி குளோபல் ஆகியவை ஆதாயப் பட்டியலில் உள்ளன. வாரத்தின் முதல் நாளே உயர்ந்தது தங்கம் விலை! (அக். 19)Stock Market Sensex, Nifty open flat Oil Retreats From 5-Month High