நடிகை கயல் ஆனந்தியின் டைட்டானிக் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தினால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவி குமார் சார்பாக திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான ஜானகிராமன் இயக்கத்தில் டைட்டானிக் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் அக்.16ஆம் தேதி வெளியாக இருந்தது.ஜெயிலர் 2 படம் அக்.15ஆம் தேதி வெளியானதால், இந்தப் படத்துக்கான திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் 2016ல் அறிவிக்கப்பட்டு, பின்னர் 2022ல் இரு முறை தள்ளிப்போனது. 2025, 2026 என இப்போதும் தள்ளிப்போயிருக்கிறது.இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஆஷ்னா ஜவேரி, காளி வெங்கட், மதுமிதா, தேர்வதர்ஷினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இந்த நிலையில், இந்தப் படம் வரும் அக்.23ஆம் தேதி வெளியாகுமென படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகள் கடின உழைப்பு, பல தடைகளைத் தாண்டி, வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறோம். குறைவான திரைகள் கிடைத்ததால் அக்.23ஆம் தேதி வெளியாகவிருக்கிறோம். டைட்டானிக் ஒர் அழகான, மகிழ்ச்சியான, நகைச்சுவை கலந்த படம். இந்தப் படம் பள்ளியில் உங்களது முதல் காதலை ஞாபகப்படுத்தும் என்பதை உறுதியளிக்கிறேன். ஒரு படைப்பாளியாக எனது படம் உங்களது மனத்தைக் கவர்ந்து, உங்களது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறுவதை விடவும் எனக்கு பெரியது ஒன்றுமில்லை. உங்களது ஆதரவு படத்துக்குத் தேவை எனக் கூறியுள்ளார். View this post on Instagram என் பயோபிக்கில் நடிக்க பிரியங்கா சோப்ரா தகுதியானவர்..! சவிதா புனியா பேட்டி!Titanic, starring Kalaiyarasan and Anandhi, postponed again for jailer 2 release