மூவர்ணக் கொடி பேரணி செல்ல முயன்ற அபிஜீத் தீப்கே கைது!

Wait 5 sec.

தில்லியில் தேசிய கொடி பேரணிக்கு செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கேவை அவரது வீட்டு வாசலிலேயே போலீஸார் கைது செய்தனர்.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர்களிலும் போராட்டங்கள் வலுத்திருக்கின்றன.இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தக் கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அஜிங்கியா பிணைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.இதைத்தொடர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.அதைத்தொடர்ந்து, தில்லியில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த பகுதிக்கு நேரில் சென்ற பெண் காவலர்கள் உள்பட 15 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், அனுமதி அளிக்காததால் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று நோட்டீஸ் வழங்கினர்.இந்த நிலையில், போராட்டத்திற்கு செல்லக் கூடாது என அபிஜீத் தீப்கேவிற்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் போராட்டத்திற்கு செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டார். அறிவித்திருந்தது போலவே மூவர்ணக் கொடி போராட்டத்தில் பங்கேற்க, வீட்டில் இருந்து புறப்பட்டவரை போலீசார் தடுத்து அழைத்துச் சென்றனர்.High security and heavy police deployment across Central Delhi today as the CJP has called for a 'Tiranga March' near Connaught Place’s Central Park. Authorities have enforced prohibitory orders under Section 163 BNSS in surrounding areas.