டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிறைவு!

Wait 5 sec.

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து 6 வது அமர்வாக ஏற்றத்தைச் சந்தித்து 7 காசுகள் உயர்வுடன் ரூ. 94.92 என்ற அளவில் நிறைவடைந்தது. அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான தேவையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த உயர்வுக்குக் காரணமாக அமைந்தன.இருப்பினும், கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதும், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதும் ரூபாயின் கூடுதல் ஏற்றத்தை கட்டுப்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 94.75 என்ற அளவில் தொடங்கி, ​​அதிகபட்சமாக ரூ. 94.71 வரையிலும் பிறகு குறைந்தபட்சமாக ரூ. 95.06 வரையிலும் சென்றது. இறுதியில் அதன் முந்தைய நாள் முடிவை விட 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிலைபெற்றது.நேற்று (வியாழக்கிழமை) ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 94.99 ஆக நிறைவடைந்தது.The rupee stayed on upward momentum on Friday and settled 7 paise higher at 94.92.இந்தியப் பங்குச் சந்தை 2வது நாளாக உயர்வு!