திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Wait 5 sec.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கில் அன்பில் மகேஸ்ஸின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எங்கம் தப்பிச் செல்ல மாட்டார், சாட்சிகளை கலைக்க மாட்டார், விசாரணைக்கு எப்போதும் ஆஜராவார். கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. கைதான மூவர் ஜாமீனில் விடுதலையில் உள்ளனர் என அன்பில் மகேஸ் தரப்பிலும், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை, ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் தந்தால் எதுவும் வெளிவராது. அவரைக் காவலில் விசாரிக்க வேண்டியது அவசியம். வழக்கில் தொடர்புடைய முத்துக்குமாரை அன்பில் தான் பாதுகாக்கிறார் என காவல் துறை தரப்பிலும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அன்பில் மகேஸ் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. The Madras High Court reserved its verdict indefinitely on former Minister Anbil Mahesh's anticipatory bail petition in the ₹100-crore private school recognition fraud case.கோவையில் முதல்வர் விஜய்யின் வாகனத்தை நோக்கி பாட்டில் வீச்சு!