கர்நாடகத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி புதிய பிரசாரம்!

Wait 5 sec.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கர்நாடகத்தில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் புதிய பிரசாரத்தைத் தொடங்கவுள்ளனர். பெங்களூரில், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் தலைமையில் இன்று (அக். 16) மாநில அளவிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது மற்றும் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும், “சேவ் தி வோட், சேவ் தி கண்ட்ரி” (வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்) எனும் முழக்கத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பிரசாரத்தைத் தொடங்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் இந்தப் பிரசாரத்தை மேற்கொள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம் எல்) லிபரேஷன், சமாஜ்வாதி, ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.இத்துடன், எஸ்ஐஆர் பணிகள் மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிராக வரும் நவ.5 ஆம் தேதி பெங்களூரில் மாபெரும் போராட்டப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.லடாக்கில் 8 ஆவது மாவட்டம் உருவாக்கம்! துணைநிலை ஆளுநர் அறிவிப்பு!The INDIA alliance parties in Karnataka are set to launch a new campaign against the SIR and Chief Election Commissioner Gyanesh Kumar.