அக்.16, 22-இல் வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் மெமு ரயில் ரத்து

Wait 5 sec.

பொறியியல் பணிகள் காரணமாக வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் இடையேயான மெமு ரயில்கள் அக்.16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து, வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் ரயில் நிலைய ங்களுக்கு இடையே இயக்கப்படும் வண்டி எண் 66062 மற்றும் 66059 ஆகிய மெமு ரயில்கள் அக்டோபா் 16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.