ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் விண்ணமங்கலம் கிராமத்தில் ரோந்து சென்றனா். அங்கு டாஸ்மாக் மதுபானம் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த பிச்சைமணி (54), பிரகாஷ் (32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 50 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.