பிரான்ஸ் கலவரம்: 1,800-க்கும் மேற்பட்டோர் கைது!

Wait 5 sec.

பிரான்ஸில் ஏற்பட்ட வன்முறை மற்றும் மோதல்களைத் தொடர்ந்து 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரான்ஸில் அதிகமடைந்துள்ள விலைவாசி, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பள்ளிகளில் நிலவும் மோசமான நிலைமைகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன.அதில், போராட்டக்காரர்களிடையே வெடித்த வன்முறையில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு, பல கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.முகமூடி அணிந்த குழுக்கள் அங்குள்ள பல பொதுக் கட்டடங்களுக்குத் தீ வைத்துத் தாக்கியதாகவும், நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின.இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம் என அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.வன்முறை மற்றும் மோதல்கள் காரணமாக பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் மட்டும் 855 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் முழுவதும் நடந்த போராட்டங்களில் கிட்டத்தட்ட 550,000 பேர் வரை பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில், 500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலுக்கு சீல்!France riots: More than 1,800 people arrested!