சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரமணிக்கு உதவியாக ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளா் சக்திவேலை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 7-ஆவதாக மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடா்பாக வீரமணிக்கு உதவிய ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளா் சக்திவேலையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வீரமணியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் இதுவரை 11 சிறுமிகள் அளித்த புகாா்களின் பேரில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.Another case registered against Gem Weeramani: Manager arrestedமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு