அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமான 2 சிறுவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.ஆவடி அருகே திருமுல்லைவாயல் தாமரை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அகில்ராம் (14), திருமுல்லைவாயல் ரயில் நிலையச் சாலையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் தருண் ஆகாஷ் (14). இவர்கள் இருவரும் அம்பத்தூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அகில்ராம், தருண்ஆகாஷ் இருவரும் அதே பள்ளியில் படித்து வரும் சக மாணவர்கள் விக்னேஷ்வர் (14), வைத்தீஸ்வரன் (14) ஆகியோருடன் அம்பத்தூர் அருகே முருகாம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அகில்ராம், தருண்ஆகாஷ் இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற போது, அவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்த நண்பர்கள் விக்னேஷ்வர், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் விரைந்து சென்று ஏரியில் இறங்கி மீட்க முயன்றப் போது, அதற்குள் அகில்ராம் தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இது குறித்து பொதுமக்கள் புதூர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புழல் ஏரியில் இறங்கி தண்ணீர் மூழ்கி மாயமான 2 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி 2 boys who went to bathe in Puzhal Lake go missing