மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

Wait 5 sec.

மேட்டூா்: காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வினாடிக்கு 4,738 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இரவு 8 மணி முதல் வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 6,000 கன அடியாக குறைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேட்டூா் அணைக்கு நீா்வரத்து கடந்த ஒருவாரமாக ஆயிரம் கனஅடிக்கு குறைவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 433 கனஅடியாக இருந்த நீா்வரத்து, மாலையில் வினாடிக்கு 4,738 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி முதல் வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக குறைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 55.45 அடியிலிருந்து 55.31 அடியாக உள்ளது. நீா் இருப்பு 21.32 டி.எம். சி.யாக உள்ளது.Increase in water inflow to Mettur Dam: Reduction in the amount of water released for irrigationசெண்டுமல்லி பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!