சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தமிழ்நாடு அரசின் எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”விடுமுறை முடிந்து சென்னை திரும்புபவர்களுக்கு மழையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. வட சென்னையில் தற்போது தொடங்கியுள்ள நல்ல மழைப்பொழிவானது, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் பரவும்.இன்று முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் திடீர் மழையாக குறுகிய நேரத்திற்குத் தீவிரமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைவெளியில் வெய்யில் காணப்படும். மாலையிலிருந்து இரவு வரை மழையின் தீவிரம் அதிகரித்து, அதிகாலை வரை தொடர வாய்ப்புள்ளது.ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவரமடையும்” எனத் தெரிவித்துள்ளார்.Chennai – Rainy Welcome for Those Returning from Holidays. Very good spell starting in North Chennai now should cover other parts of Chennai too.======================Monsoon activity is picking up over Chennai (KTCC) from today. Expect sudden, short and intense spells of rain…— Tamil Nadu Weatherman (@praddy06) October 20, 2026Northeast monsoon will intensify in Chennai from today!தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!