சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.ராமநாதபுரம் உள்ளிட்ட சில தென் தமிழக மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் விடியவிடிய மழை கொட்டித் தீர்த்தது.இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி, இன்று பகல் 1 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் ராமநாதபுரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.pic.twitter.com/PTn0lqrDr4— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 20, 2026Chance of rain in Chennai and 9 districts till 1 pmசென்னையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்!