சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த அக்.12-இல் சவரன் ரூ. 1,280 குறைந்து ரூ.1,11,040-க்கும், அக்.13-இல் சவரன் ரூ. 280 குறைந்து ரூ. 1,09,480-க்கும், அக்.14-இல் ரூ. 760 குறைந்து ரூ.1,08,7200-க்கும் விற்பனையானது.இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 75 குறைந்து ரூ.13,515-க்கும், சவரனுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1,08,120-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 13,535-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 1,08,280-க்கு விற்பனையானது.இதனைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 32 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,570-க்கும் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ரூ. 1,08,560-க்கும் விற்பனையானது.இன்றைய தங்கம் நிலவரம்இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ. 1,07,920-க்கும் கிராமுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 13,490-க்கும் விற்பனையாகிறது.இன்றைய வெள்ளி நிலவரம்வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் | Today Gold and Silver rate in Chennai, TamilNaduமுதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமல் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு