டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு... வாய் திறக்காத பாலிவுட் பிரபலங்கள்!

Wait 5 sec.

டைகர் ஷெராஃப் மீது லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் நடத்திய தாக்குதலுக்குப் பிரபலங்கள் கருத்து சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப், மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் காத்திருந்த 3 பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இருந்தாலும் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அவரின் 2 உதவியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து காயத்திற்கு சிகிச்சை எடுத்து வீடு திரும்பியதும் டைகர் ஷெராஃபை மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சந்தித்தார்.தற்போது, துப்பாக்கியால் சுட்ட மூன்று பேரையும் மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.இருப்பினும் பாலிவுட் நட்சத்திரங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலைக் கொடுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீது பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. பஞ்சாப் பாடகர் சித்து மூஸா வாலா படுகொலைக்குப் பின் சல்மான் கான், டைகர் ஷெராஃப் என அடுத்தடுத்து பிரபலங்களையும் இக்கும்பல் குறி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட தூப்பாக்கி சூடுக்கு அவர் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலைக் கண்டித்து நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கருத்து ஏதும் சொல்லவில்லை. மௌனமாக இதனைக் கடந்து செல்வதற்கான முனைப்பைக் காட்டுவதாகவே தெரிகிறது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நேரில் சென்று டைகர் ஷெராஃபுக்கு தன் ஆறுதலைக் கூறினார். மேலும், பூனம் பாண்டே, சத்ருஹன் சின்ஹா உள்ளிட்டோர், ’பிரபலங்களின் மீதான பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக’ டைகருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். ஏதாவது கருத்து சொல்லப்போய் நமக்கு வம்பு வந்துவிடுமோ என்கிற பயத்தில்தான் இச்சம்பவம் குறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பொதுவெளியில் பேச மறுக்கிறார்கள் என ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். ஜெயிலர் 2-ல் ஹிருத்திக் ரோஷன்! வெறும் 7 நிமிட காட்சிக்கு ரூ. 25 கோடியா?Celebrities are remaining silent on the attack on Tiger Shroff by Lawrence Bishnoi's gang.