அமைதிப்பேச்சில் புதின்? ரஷியா உடன் இவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றியது இல்லை! - ஈரான்!

Wait 5 sec.

ரஷியா உடன் இதற்கு முன்பு இவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றியதில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஈரானின் அணுஆயுதத் திட்டத்தை எதிர்த்து அந்நாட்டின் மீது அமெரிக்க படைகள் கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் போர் தொடுத்துள்ளன. ஆனால், இந்தப் போரில் தற்போது ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதில் அமெரிக்கா மும்முரம் காட்டி வருகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் வளைகுடா பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளை ரஷிய அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ஈரானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ உடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி கடந்த திங்களன்று (அக். 20) முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தச் சந்திப்பு குறித்து ஈரானிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் ஐரோப்பா முதல் மேற்கு ஆசியா வரை, லெபனான், பாலஸ்தீனம், உக்ரைன் மற்றும் யேமன் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும், பொருளாதார மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பின் விரிவாக்கம் குறித்தும் கவனம் செலுத்தினோம். வரலாற்றில் இதற்கு முன்பு ஈரான் மற்றும் ரஷியா இவ்வளவு நெருக்கமாகப் பணியாற்றியதில்லை” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்வதற்குத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் லாவ்ரோவின் ஈரான் பயணம் அமைந்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. இதன்மூலம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ரஷிய அதிபர் புதின் நேரடியாகத் தலையீடக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.உலகின் முக்கிய நாடுகளில் ஜென் ஸீக்கள் போராட்டம்!Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi said that he had never worked so closely with Russia before.