வட கொரிய அதிபர் கிம் ஜான் உங் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் மூளைச்சாவு அடைந்ததாகவும் இரு நாள்களாகத் தகவல்கள் வெளியாகின. அவர், கோமாவில் இருப்பதால் அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. ஒருவேளை கிம் உயிரிழந்தால் அவருக்குப் பின் நாட்டின் அதிபராக யார் பதவி வகிப்பார் என்றும் விவாதங்கள் கிளம்பின. அதிபர் பதவிக்கான அதிகாரப் போட்டியில் கிம்மின் மகளும், சகோதரியான கிம் யோ ஜோங்கும் இடம்பெறுவர் எனக் கூறப்பட்டது. ஆனால் எந்த ஆதாரமோ, அதிகாரப்பூர்வ தகவலோ இன்றி இந்த வதந்திகள் பரவி வந்தன.இந்த நிலையில், கிம் தனது மகள் கிம் ஜூ ஏ மற்றும் மனைவி ரி சோல் ஜூ உடன் தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை நேற்று பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.வட கொரியாவில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை பார்வையிட்ட அதிபர் கிம் ஜான் உங் கண்காட்சியில் பொருட்களை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் உரையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படங்களை வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.வட கொரியாவில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை பார்வையிட்ட அதிபர் கிம் ஜான் உங் கிம்மின் உடல்நிலை குறித்து இதுபோன்ற வதந்திகள் பரவுவது முதல் முறையல்ல. வட கொரியா ரகசியத் தன்மையுடன் இயங்கும் நாடு என்பதால், பொதுப் பார்வையிலிருந்து சில காலம் அவர் விலகியிருந்தால் கூட அவரது உடல்நிலை தொடர்பான யூகங்கள் எழும். வட கொரியாவின் தலைமையில் ஏற்படும் மாற்றங்கள் அந்தப் பிராந்தியம் முழுவதிலும் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் உலக நாடுகளும், பல உளவு நிறுவனங்களும் கிம் ஜான் உங்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். உலகின் முக்கிய நாடுகளில் ஜென் ஸீக்கள் போராட்டம்!Regarding reports that North Korean President Kim Jong Un has died.