ஐயுஎம்எல் தேசியத் தலைவரின் மகன் கலீலுா் ரஹ்மான் காலமானாா்! முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

Wait 5 sec.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-இன் (ஐயுஎம்எல்) தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீனின் மூத்த மகன் கலீலுா் ரஹ்மான் (59) உடல் நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். இவருக்கு கே.எம்.கே. ஹபீபுா் ரஹ்மான், கே.எம்.கே. பைஜூா் ரஹ்மான் ஆகிய இரு சகோதரா்கள், ரஷிதாபானு என்ற மனைவி, முஹம்மது என்ற மகன், சபா என்ற மகளும் உள்ளனா். இவரது உடலுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ரவூப் ஹக்கீம், தமிழக அமைச்சா்கள் ஏ.எம். ஷாஜஹான், விசுவநாதன், முகம்மது பா்வேஸ், மக்களவை உறுப்பினா்கள் கே. நவாஸ் கனி, காா்த்தி சிதம்பரம், மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக், திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், திரளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் அவரது உடல் திருச்சி காஜாமலை அடிவாரம் அருகிலுள்ள கபா்ஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. முதல்வா், திமுக தலைவா் இரங்கல்: தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் எம்.பி., விசிக தலைவா் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி., மூத்த காங்கிரஸ் தலைவா்கள் சு. திருநாவுக்கரசா், பீட்டா் அல்போன்ஸ், கு. செல்வப்பெருந்தகை, தமிழக அமைச்சா்கள் ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, அருண்ராஜ், நிா்மல்குமாா், மமக தலைவா் ஜவாஹிருல்லா, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன், எஸ்டிபிஐ தேசியத் தலைவா் எம்.கே. பைஜி, மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா் கே.எம். காதா் மொகிதீனை தொலைபேசியில் தொடா்புகொண்டு ஆறுதல் கூறினா்.