பிகார்: மெமு ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து

Wait 5 sec.

பிகாரில் மெமு ரயிலின் 2 பெட்டிகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டால் பரபரப்பு நிலவியது. பிகார் மாநிலம், சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் ரயில் நிலையத்தில் சமஸ்திபூர்-சஹர்சா மெமு ரயிலின் இரண்டு பெட்டிகளில் திங்கள்கிழமை அதிகாலை தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இதுகுறித்து ரயில்வே அதிகாரி சரஸ்வதி சந்திரா கூறுகையில், "அதிகாலை சுமார் 3 மணியளவில் சமஸ்திபூர்-சஹர்சா மெமு ரயில் சிம்ரி பக்தியார்பூர் நிலையத்திற்கு வந்தடைந்தபோது, ​​ரயிலின் மோட்டார் பெட்டியில் தீப்பிடித்திருப்பதாக நிலைய அதிகாரி தகவல் தெரிவித்தார்."தீ விரைவாக மற்றொரு பெட்டிக்கும் பரவியது. தீயணைப்பான்களைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரயிலில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். மேல்நிலை மின்சாரக் கட்டமைப்பு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இறுதியில், காலை 5.50 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை," என்று தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.Fire engulfed two coaches of the Samastipur-Saharsa MEMU train at Simri Bakhtiyarpur station in Bihar's Saharsa district on Monday morning, officials said.காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்