இப்படியொரு கிளைமேக்ஸை பார்த்திருக்க மாட்டீர்கள்: வெங்கட் அட்லுரி

Wait 5 sec.

இயக்குநர் வெங்கட் அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 2) கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட் அட்லுரி, “2.30 மணி நேரம் கொண்ட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் குறைந்தது 1.45 மணி நேரம் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். என்னை நம்புங்கள், இது என் வாக்கு. ஜென்ஸி தலைமுறையினர் இப்படத்தை மிகவும் விரும்புவார்கள். நடிகர்கள் சூர்யா மற்றும் ராதிகாவுக்கு இடையேயான 10 நிமிட நகைச்சுவைக் காட்சி விரும்பப்படும். நீங்கள் இப்படியொரு கிளைமேக்ஸை பார்த்திருக்க மாட்டீர்கள். இது, நவீன கால திரைப்படமாக உருவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். உயிரோடு இருக்கும் வரை இனி சேரப்போவதில்லை: ரவி மோகன்Director Venky Atluri has spoken about the story of the film Viswanath & Sons.