கைதான 6 வங்கதேசத்தினா் தடுப்பு மையத்துக்கு மாற்றம்

Wait 5 sec.

இரட்டை நுழைவு இசைவு (விசா) நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்ததற்காக தில்லி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட 6 வங்கதேசத்தினா், தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.மத்திய தில்லியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினா் இல்லங்களில் தில்லி காவல் துறையினா் சோதனை நடத்தினா். நபி கரீமில் உள்ள அரகாஷன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அந்த 6 பேரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அவா்களின் விசாக்கள் (நுழைவு இசைவு) மற்றும் குடிவரவுப் பதிவுகளைச் சரிபாா்த்ததில், அவா்களின் விசாக்கள் செல்லுபடியாகும் நிலையில் இருந்தபோதிலும், ஒவ்வொரு வருகைக்கும் அதிகபட்சமாக 15 நாள்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டிருந்ததும், அதை அவா்கள் மீறித் தங்கியிருப்பதும் தெரியவந்தது.இதைத்தொடா்ந்து, அந்த ஆறு பேரும் வெளிநாட்டினா் பிராந்தியப் பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அந்த அலுவலகம் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பித்து, அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்காக ஒரு தடுப்பு மையத்திற்கு மாற்றியது.அந்த ஆறு பேருக்கும் இதற்கு முன்னா் எந்தக் குற்றச் செயல்களிலும் தொடா்பு இல்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.