மழை வேண்டி கஞ்சிக் கலய ஊா்வலம்

Wait 5 sec.

ஆம்பூா் அருகே மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் மழை வேண்டி கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலம் சென்றனா். மாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கிய ஊா்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று நெமிலியம்மன் கோயில் அருகே நிறைவடைந்தது. இந்த கஞ்சி கலயம் ஏந்தி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.