மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் அரசின் முன் அனுமதியின்றி கோகோ விவசாய நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றினால், விவசாயிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிசெய்யும் புதிய சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், கோகோ சாகுபடி பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதத் தங்கச் சுரங்கத் தொழில்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன், பாதிக்கப்படும் ஒவ்வொரு கோகோ மரத்துக்கும் அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.கானா நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் கோகோ பீன்ஸ் சுமாா் 15 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளதுடன், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. எனவே, கோகோ பண்ணைகளுக்குப் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கி, அவற்றை அனுமதியின்றி மாற்றுவதை இந்த மசோதா குற்றமாக அறிவிக்கிறது.ஆனால், அரசின் இத்தகைய கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு விவசாயிகள் மற்றும் வேளாண் சங்கங்களின் மத்தியில் கடும் எதிா்ப்பு நிலவுவதால், அதிபா் ஜான் மஹாமா மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.