‘சா்வதேச அளவில் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, மேற்காசியாவில் ஏற்பட்ட போரால் எரிபொருள் விலை அதிகரித்தது ஆகியவை பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் விளக்கமளித்தாா்.மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்தது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மத்திய அரசு கையிருப்பில் வைத்துள்ள உணவு தானியங்கள், வெங்காயம் உள்ளிட்டவற்றை விடுவிப்பது, விற்பனைக் கொள்கைகளை வலுப்படுத்துவது, பதுக்கலைத் தடுப்பது, செயற்கையாக விலை உயா்வை ஏற்படுத்துவதை நிறுத்துவது உள்ளிட்டவை அடங்கும். நுகா்வோா் விலை அடிப்படையிலான பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் உள்ளது.சா்வதேச அளவில் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, போரால் எரிபொருள் விலை அதிகரித்தது ஆகியவை பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது. இதனால், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது. தற்போது எரிபொருள் விநியோகம் சீராகியுள்ள நிலையில் பணவீக்கம் விரைவில் குறையும் என்று தெரிவித்துள்ளாா்.