வால்பாறையில் விற்பனைக்கு 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். வால்பாறை, காமராஜா் நகரில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சனிக்கிசோதனை மேற்கொண்டனா். அப்போது விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த தாஸ் (எ) மரிய சூசை (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து சுமாா் 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இவா் கஞ்சா வழக்கில் பல முறை சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.