தஞ்சையில் நேற்று நடைபெற்ற திமுக போராட்டத்தின் போது, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து உதயநிதி கடுமையான விமர்சனம் செய்துப் பேசியிருந்தார்.இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ஆண்களின் அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ,இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் உள்ளிட்ட அரசியல் ஆபாசங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். பொதுவாழ்வில் கண்ணியம், பெண்கள் உள்ளிட்ட சக மனிதர்கள் மீதான மரியாதையைக் கடைபிடிக்க வேண்டியது மிக அடிப்படையான பண்பு. பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிற ஒருவர் எப்படி பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாகப் பேசமுடியும்? மிக நிச்சயமாக இப்படியொரு மோசமான பேச்சை எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை. கடுமையான கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சுஅதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ஆண்களின் அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ,இரட்டை அர்த்தப் பேச்சுக்கள்…— Jothimani (@jothims) August 4, 2026 உதயநிதி பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் எழுந்திருக்கும் நிலையில், அவரது வீட்டு வாசலில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.Are women easy targets in politics? Jothimani strongly condemns this